Posts

Showing posts from May, 2015

நந்தவனத்திலோர் ஆண்டி

Image

“இறந்துபோன ஒருவரைப் பற்றி அவர் நமது எதிரியாக இருந்தாலும் நாலு வார்த்தை நல்லதாகச் சொல்ல வேண்டும் என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் . . . அவரைப் பற்றிய எனது முடிவுகளை ஒரு தனிமனிதனின் மரணத்தின் பொருட்டு நான் கைவிட முடியாது” என 1969ஆம் ஆண்டில் கா. ந. அண்ணாதுரை மறைந்த பொழுது அவருக்கு நினைவஞ்சலி செலுத்துவதற்காக இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தமிழகத் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கண்ணதாசன் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற் பேசியவர் ஜெயகாந்தன்.எனவே தனிமனிதராகிய அவரது மரணத்தின் பொருட்டு அவரைப் பற்றிய அவரது படைப்புகளையும் சிந்தனைகளையும் பற்றிய எதிர்நிலைக் கருத்துகளை, ‘நாகரிகம்’ கருதி நம் மனதிற்குள் புதைத்துக்கொண்டு, அவரது தோளில் புரளும் தலைமுடியையும் முறுக்கிவிடப்பட்ட மீசையையும் சட்டைபோடாமல் வெற்றுடம்புடன் தன்வீட்டு மொட்டைமாடியின் கீற்றுக் கொட்டகைக்குள் தான் கூட்டிய சபையின் நடுவில் அவர் அமர்ந்து ‘சிலுப்பி’யை ஒயிலாய்ப் பிடித்து கஞ்சாப்புகையை உள்ளிழுத்து மெல்ல மெல்ல விடுகின்ற அழகை(?)யும் விதந்தோதி ‘அக்காட்சியைக் கண்டதே தனது பிறப்பின் பேறு’ எனப் பிதற்றுவது ‘இலக்கியத் தரம்’ அ…