Posts

Showing posts from March, 2015

கொண்டாடிக் கொல்லாதீர்!

Image


பன்னாட்டு நிறுமமாக மாறத் துடிக்கும் உள்நாட்டு நிறுமம் ஒன்றின் வரவேற்பு அரங்கு.வெவ்வேறு நோக்கத்திற்காக அந்நிறுமத்திற்கு வந்திருந்த பலர் அவ்வரங்கில் காத்திருந்தார்கள். காத்திருத்தலின் சலிப்பை மழுங்கச் செய்யும் நோக்கில் அரங்கச் சுவரில் பொருத்தப்பட்டு இருந்த தொலைக்காட்சியில், திரைப்படப் பாடற் காட்சியொன்று ஒளிபரப்பாகிக்கொண்டு இருந்தது. காத்திருந்தோரில் பலர் அக்காட்சியில் மூழ்கிப்போய் இருந்தார்கள். அதிக நேரம் மூழ்கிக் கிடந்த சிலர், திடீரென மயக்கம் தெளிந்து தம் கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்து, ‘உச்’சுக் கொட்டிவிட்டு மீண்டும் பாடற்காட்சியில் மூழ்கிப் போனார்கள். அந்நிறுமத்தில் பணியாற்றும் நண்பரைச் சந்திக்கச் சென்ற நான் அவர்களில் ஒருவனாக அங்கு அமர்ந்தேன். சிறிது நேரத்தில், அந்நிறும விளிம்புநிலைப் பணியாளர் ஒருவர் சாக்லெட்டு கட்டிகள் நிறைந்த பெரிய தட்டொன்றை எடுத்துக்கொண்டு அந்த அரங்கிற்குள் நுழைந்தார். அங்கிருந்த அனைவருக்கும் ஆளுக்கொரு சாக்லெட்டு கட்டியை வழங்கத் தொடங்கினார். பல முறை அந்நிறுமனத்திற்குச் சென்றிருக்கும் எனக்கு அச்செயல் புதியதாக இருந்தது.எனவே என்னிடம் அவர் தட்டை நீட்டிய…