Posts

Showing posts from December, 2014

காலத்தின் கையில் நான் சுற்றுகிறேன்

Image
மாமியார் – மருமகள் சண்டையையும் அண்ணன் – தங்கை பாசத்தையும் கணவனைத் திருத்தும் மனைவியின் பொறுமையையும் திரும்பத் திரும்ப எழுதுகிறவர்களாகவே பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என நான் எண்ணிக்கொண்டிருந்த எனது பதின்பருவத்தில் சிறுகதை எழுத்தாளரும் நண்பருமான பீர்முகமது அப்பாவின் வழியாக ராசம் கிருட்டிணனின் பெயர் எனக்கு அறிமுகமானது. 1984 அல்லது 1985ஆம் ஆண்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒருங்கிணைத்திருந்த ‘புதினம் படைத்தல்’ என்னும் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்க இருந்த அவர், அதற்கான முன்னாயத்தமாக சில புதினங்களைப் படித்துக்கொண்டு இருந்தார். அவருக்குக் கிடைக்காத புதினங்கள் சிலவற்றைத் தேடியெடுத்துக் கொடுக்கும்படி என்னிடம் வேண்டினார். அவ்வாறு அவர் கொடுத்த பட்டியலின் வழியாகத்தான் ராசம் கிருட்டிணனின் பெயர் எனக்கு அறிமுகம் ஆனது.  பட்டியலில் இருந்த பத்து புதின எழுத்தாளர்களில் இவர் மட்டுமே பெண் எழுத்தாளராக இருந்தார். இதுவே, ‘அவருடைய புதினத்தில் அப்படி என்ன இருக்கிறது?’ என்னும் ஆர்வத்தைக் கிளற, அவருடைய “கூட்டுக்குஞ்சுகள்” புதினத்தை நூலகத்தில் இருந்து தேடியெடுத்துப் படித்தேன். பருவ இதழ்களில் பெண்…