Posts

Showing posts from November, 2014

விருது வேண்டுமா விருது!

Image
சில ஆண்டுகளுக்கு முன்னர், அப்பொழுது நான் பணியாற்றிக்கொண்டு இருந்த நிறுவனத்திற்குக் கடிதம் ஒன்று வந்தது. தமிழ் வளர்ச்சித் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற உயர் அலுவலர் ஒருவர் அதில் கையொப்பமிட்டு இருந்தார்.  அச்சிடப்பட்டு இருந்த அக்கடிதம், அந்நிறுவனம் இச்சமூகத்திற்கு ஆற்றி இருக்கும் அளப்பரிய பணிகளைப் பாராட்டி மூன்று திங்களுக்குப் பின்னர் சென்னையில் நடைபெற இருக்கும் விழாவில் விருது வழங்க இருப்பதை பெருமகிழ்வோடு அறிவித்தது. மேலும் அக்கடிதம் கிடைத்ததும் குறிப்பிட்ட தொலைபேசி எண் ஒன்றில் உடனடியாகத் தொடர்புகொண்டு பேசும்படி அது தெரிவித்தது.  ‘நிலமற்ற ஏழையரின் நிலவுரிமைக்காக வடஇந்தியாவில் போரடிக்கொண்டு இருக்கும் காந்திய இயக்கம் ஒன்றின் பயிற்சி நடுவமான அந்நிறுவனத்தின் எந்த அளப்பரிய பணியை இந்த தமிழலுவலர் அறிந்தார்? எப்படி அறிந்தார்?’ என அறியும் ஆவல் உந்த, கொடுக்கப்பட்டு இருந்த தொலைபேசி எண்ணை அழுத்தினேன்.  மறுமுனையில் அந்த தமிழலுவலரின் குரல் ஒலிக்க உரையாடல் தொடங்கியது.
“ஐயா, உங்க கையொப்பத்தோட ஒரு கடிதம் எங்க நிறுவனத்திற்கு வந்திருக்குது.” “நீங்க அந்த நிறுவனத்தோட பொறுப்பாளரா?” “ஆமா” “உங்க நிறுவனத்துக்கு வி…