Posts

Showing posts from July, 2014

பணம் + சாதி + வன்முறை + போதை + மூடநம்பிக்கை = தேர்தல்

Image
(வினைத்திட்பம் என்னும் நெடுங்கதையை தேனி விசாகன் எழுதியிருக்கிறார். 2014 ஆம் ஆண்டு மார்ச்சு திங்களில் இக்கதையின் ஈற்றயல் வடிவிற்கு எழுதப்பட்ட மதிப்புரை இது. இதில் கூறப்பட்டுள்ளவற்றுள் கொள்வன கொண்டு, தள்ளுவன தள்ளி கதையின் இறுதிவரைவு  விரைவில் நூலாக வெளிவர இருக்கிறது.) தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பதினொரு உட்கிடை கிராமங்களைக்கொண்ட ஊராட்சி மாருகால்பட்டி.  சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பறிகொடுத்த கட்சிக்கான மருகால்பட்டிக் கிளையின் செயலாளரும் அரசு ஒப்பந்தக்காரருமான புரட்சியார் என்பவர் உள்ளாட்சித் தேர்தலில் தன் தந்தை அன்னஞ்சித் தேவரை ஊராட்சி மன்றத் தலைவராக ஆக்க மேற்கொள்ளும் முயற்சியைப் பற்றி தேனி மாவட்ட பிரமலைக் கள்ளரின் பேச்சு வழக்கில் எடுத்துரைக்கும் புனைவே வினைத்திட்பம் என்னும் நெடுங்கதையாக விரிந்திருக்கிறது.  இந்திய ஒன்றிய அரசின் நாற்காலியில் குவித்திருக்கும் அதிகாரத்தை,  இந்திய அரசமைப்பின் பிற உறுப்புகளான மாநில அரசு, மாவட்ட அரசு, ஊராட்சி ஒன்றிய அரசு, ஊராட்சி அரசு ஆகியவற்றிற்கு கீழிருந்து மேல்நோக்கிய வடிவில் முக்கோண வடிவில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது காந்தி…

இராமலிங்க விலாசம்

Image
கலைநயம்மிக்க நுழைவாயில்.  உள்ளே நுழைந்தால் திறந்த வெளி முற்றம். அதில் கிழக்கு நோக்கி அமைந்த, உயர்ந்த மேடை. அதன்மீது இரண்டு முகப்புத் தூண்களை உடைய பெரிய கட்டிடம். இதுதான் இராமநாதபுரத்தில் இருக்கும் இராமலிங்க விலாசம்; சேது நாட்டின் மன்னர்களான சேதுபதிகள் கொலுவீற்றிருந்து அரசு செலுத்திய அத்தானி மண்டபம்.  இதன் தரையில் கண்விழித்துப் படுக்கும் ஒருவர் தாம் ஓவியம் நிறைந்த வண்ணப்பெட்டி ஒன்றிற்குள் படுத்திருக்கிறோமே என எண்ணத் தோன்றும் அளவிற்கு சுவர்களிலும் கூரைகளிலும் 18 ஆம் நூற்றாண்டு ஓவியங்களைக் கொண்ட கலைப்பெட்டகம். 
வரலாறு: சேதுநாட்டை 1678 ஆம் ஆண்டு முதல் 1710 ஆம் ஆண்டு வரை ஆண்ட ஏழாவது சேதுபதியான கிழவன் சேதுபதி என்னும் இரகுநாத சேதுபதி, தன்னுடைய தலைநகரை புகழூரிலிருந்து இராமநாதபுரத்திற்கு மாற்றினார். சிதைந்துகொண்டிருந்த பாண்டியர் கட்டிய மண்கோட்டையை அகற்றிவிட்டு செவ்வக வடிவிலான கற்கோட்டையைக் கட்டினார்.  அதனுள் அரண்மணை, விருந்தினர் மாளிகை, அரசவை உள்ளிட்ட பல கட்டிடங்களைக் கட்டினார். அவற்றுள் ஒன்றுதான் இராமேசுவரம் சிவனின் பெயரால் அமைந்த இந்த இராமலிங்க விலாசம் ஆகும்.  இதில் கிழவன் சேதுபதிக்கு பின்னர்…

எப்பக்கம் வந்து புகுந்திடும் இந்தி?

Image
2002ஆம்ஆண்டுசெப்டம்பர் 10 ஆம்நாள்முதல்அக்டோபர் 2ஆம்நாள்வரைபீகார்மாநிலத்தின்தென்பகுதியில்ஒருநடைபயணம்மேற்கொள்ளப்பட்டது.  ஒற்றுமைப்பேரவைஎனதமிழில்பொருள்படும்ஏக்தாபரிசத்துஎன்னும்காந்தியஅமைப்புநிலவுரிமைக்கானபரப்புரைஇயக்கமாக