Posts

Showing posts from May, 2014

சிராப்பள்ளி கீழ்க்குடைவரைக் கோயில்

Image
சித்திரைத் திங்கள். நண்பகல். வெயிலில் குளித்துக்கொண்டு இருந்தது திருச்சிராப்பள்ளி. தேர்ந்த ஊர்சுற்றியும் என் தம்பியுமான மணிகண்டனும் நானும் தாயுமானவர் கோயில் அமைந்துள்ள கற்குன்றின் உச்சிக்குச் சென்று, நீரோட்டத்தைத் தொலைத்த காவிரியையும் தன்னியல்பு திரிந்து கற்காடாக மாறிக்கொண்டு இருக்கும் கழனிகளையும் பார்த்துவிட்டு கீழே இறங்கிக்கொண்டு இருந்தோம்.  குன்றின் இடுப்பு மடிப்பைப் போல, மாணிக்க விநாயகர் கோவிலுக்கும் தாயுமானவர் கோயிலுக்கும் இடையே, கிழக்கு மேற்காய் நீண்டு கிடக்கும் தெருவிற்கு வந்தோம். அத்தெருவில் யானை நிற்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் சுவரில், “பல்லவர் கால குகைக்கோவிலுக்குச் செல்லும் வழி” என எழுதியிருப்பதை தம்பியிடம் சுட்டிக் காட்டினேன். “இது பக்கத்தில ஒரு சந்துல இருக்கு. மேல இருக்கிற லலிதாங்குர பல்லவ ஈசுவர கிரகத்தைவிட அழகா இருக்கும். நீ இதுவரைக்கும் அதப் பார்த்த்து இல்லையா? வா போகலாம்” எனக்கூறி அத்தெருவில் மேற்குத் திசையில் சிறிதுதொலைவு சென்று, வடக்கே பிரியும் சந்திற்குள் நுழைந்து கற்குன்றின் அடிவாரத்திற்கு அழைத்துச் சென்றார்.    நான்கடி உயர வளாகச் சுவருக்கு அப்பால் கற்குன்றின…