Posts

Showing posts from April, 2014

கல்மரம்

Image
ளப்பணிக்காக பெரம்பலூர் மாவட்டத்தின் ஊரகப் பகுதியில், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர் செகதீசனோடு, சில கிழமைகளுக்கு முன்னர் சுற்றிக்கொண்டு இருந்தேன். ஆதனூரில் இருந்து குளத்தூருக்கு வரும் வழியில் உள்ள நடுவலூரில் “கல்மரம் தேசிய பூங்காவிற்குச் செல்லும் வழி” என்னும் கைகாட்டிப் பலகை கண்ணிற் பட்டது. அருங்காட்சியகங்கள் சிலவற்றிலும் உதகமண்டலத்தில் உள்ள பூங்காவிலும் பொருட்காட்சிகள் பலவற்றில் தொல்லியல் துறையின் அரங்கிலும் கல்மரம் (Petrified wood) சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். அவை அனைத்தும் எங்கோ கண்டெடுத்து அங்கு கொண்டுவரப்பட்டவை ஆகும். உயிரி ஒன்று கல்லாக மாறும் முறையை அறிவியல் புலவர் கொண்டல் சு. மகாதேவன் எழுதிய ‘கல்லாய்ச் சமைந்த உயிரினங்கள்’ என்னும் கட்டுரையிற் படித்ததில் இருந்து, கல்மரம் ஒன்றை அது தோன்றிய இடத்திலேயே காண வேண்டும் என்பது எனது ஆவல். ஆனால் அதற்கான வாய்ப்பு இதுவரை வாய்க்கவே இல்லை. ஒருவேளை அந்தக் கைகாட்டிப் பலகை அந்த ஆவலை நிறைவு செய்யக்கூடும் என எண்ணி, அப்பூங்காவைப் பற்றி செகதீசனிடம் வினவியபொழுது, தான் இதுவரை அம்மரத்தைப் பார்த்தது கிடையாது எனக் கூறினார். அருகில் இருந்த தேநீர…