Posts

Showing posts from February, 2014

சுஜாதாவிற்கு சினமூட்டிய பேட்டி

Image
இன்றைக்கு சுஜாதாவிற்கு நினைவுநாளாம். யாரோ ஒரு நண்பர் என்னையும் சுஜாதாவின் புகழ்பாடும் “எழுத்தாளர் சுஜாதாவின் விசிறிகள் குழு” என்னும் முகநூல் பக்கத்தில் இணைத்துவிட்டு இருக்கிறார். இது சுஜாதாவை நான் சந்தித்த இரண்டு நிகழ்வுகளை நினைவிற்குக் கொண்டுவந்து விட்டது.

நிகழ்வு 1:

1992 ஆம் ஆண்டு. தினமலர் நாளிதழின் திருநெல்வேலி பதிப்பில் செய்தியாளராக நான் பணியாற்றிக்கொண்டு இருந்தேன். (அதன் இதழியற்கொள்கையோடு நாளும் முரண்டுபட்டு சில மாதங்களிலேயே அதனைவிட்டு வெளியே வந்தது வேறு கதை). நெல்லை மனோண்மணியனார் பல்கலைக் கழகத்தின் கணிப்பொறியியல் துறையின் சார்பில் ஆர்த்தி விடுதியில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. அதற்கு ஆர்.எம்.கே.வி.யும் தினமலரும் நன்கொடையாளர்கள். சுஜாதா காலையில் கருத்தரங்கைத் தொடங்கிவைக்கவும் மாலையில் சுழற்சங்கத்தில் உரையாற்றவும் அங்கே வந்தார். அக்கருத்தரங்கத்திற்கான அழைப்பிதழை என்னிடம் கொடுத்த கணிப்பொறித் துறையின் பேராசிரியர் கிருட்டிணன், “கோமல் சுவாமிநாதனை நீங்கள் பேட்டி கண்டு நகர்மலரில் கட்டுரை எழுதியதைப்போல, சுஜாதாவையும் பேட்டி கண்டு எழுதுங்கள்” என்றார். “சரி” என்றேன். அவரே சுஜாத…

கைக்கு வந்த கண்ணதாசன் கல்யாணப்பரிசு

Image
தேனி வரசக்தி விநாயகர் கோவிலில் ஒவ்வோராண்டும் நவராத்திரி கலை இலக்கிய விழாவாகக் கொண்டாடப்படும். இவ்விழாவிற்கு கவிஞர் கண்ணதாசன் ஒருமுறை வந்திருக்கிறார்; கவியரங்கிற்கு அன்று, இலக்கியப் பேருரை ஆற்றுவதற்காக. அது என் அப்பா இறந்த 1977ஆம் ஆண்டாக இருக்க வேண்டும்; ஏனவே அவரது உரையை நான் நேரடியாகப் கேட்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. ஆனால் தனது வாழ்க்கையையும் இலக்கியத்தையும் கண்ணதாசன் நகைச்சுவையோடு எடுத்துரைக்கும் அந்தப் பேருரையின் ஒலிநாடாவை அதற்குப் பின்னர் ஆண்டுதோறும் கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் ஒலிக்கவிடுவார்கள்; அப்பொழுது பலமுறை அதனைக் கேட்டிருக்கிறேன். அவ்வுரையில் தான் பெண்பார்த்த படலத்தையும் திருமணம் நடந்த கதையும் மிகச்சுவையாக கண்ணதாசன் விளக்கி இருப்பார். அதன் சாரம் இதுதான்:கண்ணதாசன் திரைத்துறையில் நுழைந்தும் நுழையாத அந்தவேளையில் தன்கட்டுப்பாடு இல்லாமல் பெண்களோடு சுற்றுகிறார் என்னும் தகவல் காரைக்குடியில் இருந்த அவருடைய வளர்ப்பது தாயாருக்கு அண்ணன் ஏ. எல். சீனிவாசனால் சொல்லி அனுப்பப்படுகிறது. உடனே தாயார் கண்ணதாசனுக்கு பெண்பார்க்கத் தொடங்குகிறார். பத்து பெண்களை அவர் தேர்ந்தெடுத்துவிட்…

காலச்சுவட்டின் வெள்ளிவிழா நாட்காட்டியும் கிருட்டிணம்மாள் செகநாதனும்

Image
சென்னைப் புத்தகக்கண்காட்சியின் இறுதிநாள். நண்பர் பாலமுருகன் வருகைக்காகக் காத்துக்கொண்டும் நூல்களை தேர்ந்தெடுத்து வாங்கிக்கொண்டும் திரிந்தேன். நண்பரிடம் இருந்து சில அழைப்புகள் வந்தன; எடுத்துப் பேசும் ஒவ்வொருமுறையும் இணைப்பு அறுந்தது. திருப்பி அழைத்தால் இணைப்பே கிடைக்கவில்லை. சலிப்படைந்து கைபேசியைச் சட்டப்பைக்குள் போட்டுக்கொண்டு சலிப்போடு வலப்பக்கம் இருந்த கடைக்குள் நுழைந்தேன். முழுக்க காலச்சுவடு பதிப்பக நூல்களாக இருந்தன. வெளியே வந்து பெயர்ப்பலகையைப் பார்த்தேன். சுதர்சன் என இருந்தது. பார்வையைக் கீழே இறக்கி, பொறுப்பாளர் இருக்கைக்கு அருகில் தொங்கிக்கொண்டு இருந்த நாட்காட்டியைப் பார்த்தேன். கோட்டோவியமாக அதில் வரையப்பட்டு இருந்த முகம் தெரிந்த முகமாக இருந்தது. சற்று கண்ணைச் சுருக்கிப் பார்த்த பொழுது (வயது ஆயிருச்சுல்ல) அது “கிருஷ்ணம்மாக்கா” என மதுரை காந்தி நண்பர்களாலும் “அம்மா” என திருவாரூர் மாவட்டத்தின் உழைக்கும் மக்களாலும் அழைக்கப்படும் “கிருட்டிணம்மா செகநாதன்” முகம்தான் அது. படத்திற்கு மேலே அச்சிடப்பட்டு இருந்த தேதியைப் பார்த்ததும் மனது துணுக்குற்றது. ‘இருக்குமா?... நமக்குத் தெரியாமல் போ…