Posts

Showing posts from January, 2014

ஆம் ஆத்மி: யானையாய் மாறிய யானைப்பாகர்?

Image
மேதா பட்கர் பல்வேறு சமுதாயச் செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து 2004 ஆம் ஆண்டில் மக்கள் அரசியல் முன்னணி (People's Political Front) என்னும் அரசியல் கட்சியை உருவாக்கினார். அக்கட்சி அவ்வாண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் சில இடங்களில் போட்டி இட்டது. அப்பொழுது, சமுதாயச் செயற்பாட்டு இயக்கங்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது பற்றி காந்தியச் செயற்பாட்டாளரான பு. வீ. இராசகோபால் (P.V.Rajagopal), ஆட்சியாளர்களை வேலைவாங்க வேண்டிய சமுதாயச் செயற்பாட்டாளர்கள் ஆட்சியாளர்களாக இருப்பதைவிட ஆட்சியாளர்களை வேலைவாங்குபவர்களாக இருக்க வேண்டும் என்னும் பொருளில், “யானையாக இருப்பதைவிட யானைப்பாகனாக இருப்பதே சிறந்தது” என எங்கள் இருவருக்கும் இடையிலான உரையாடல் ஒன்றில் கூறினார். அவரின் கூற்றை இப்பொழுது ஆம் ஆத்மி கட்சியினர் உண்மை ஆக்கிக்கொண்டு இருக்கின்றனர்.

சிந்தாந்தமும் தொலைநோக்கும்:



இதற்கு முன்னர் அரசியல் கட்சியைத் தொடங்கிய சமுதாயச் செயற்பாட்டாளர்களான ஓய். டேவிட்டின் சமத்துவ சமுதாய இயக்கத்திற்கு வர்க்க வேறுபாடற்ற சோசலிச சமுதாயத்தையும் மேதாவின் மக்கள் அரசியல் முன்னணிக்கு காந்திய சோசலிச சமுதாயத்தையும் உருவாக்குவது என சிந்…