Posts

Showing posts from November, 2013

குன்றும் நீர்வளமும் பெருகும் நீர்த்தேவையும்

Image
ஆழ்குழாய்க் கிணற்றுக் குழிக்குள் தவறிவிழுந்து மாண்டுபோகும் குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் அண்மைக்காலத்தில் அதிகரித்து இருக்கிறது. இச்சமூகம் குழந்தைகளின் பாதுகாப்பு உரிமையை மதிக்கவில்லை; அந்நிலத்தின் உரிமையாளருக்கும் ஆழ்குழாயைத் தோண்டும் ஒப்பந்ததாரருக்கும் பொறுப்பில்லை; குழிக்குள் விழுந்துவிட்ட குழந்தையை உடனடியாக மீட்கத் தேவையான கருவிகள் தீயணைப்புத் துறையினரிடம் இல்லை ஆகியன போன்றவை இந்நிகழ்விற்கான காரணிகள் என்னும் பட்டியலில் ஓரளவு உண்மை இருக்கிறது; ஆனால் இப்பட்டியலே முழு உண்மை அன்று. அந்த நிலத்தின் உரிமையாளர் ஆழ்குழாய் கிணற்றை அமைக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது என்னும் வினாவிற்குள்தான் இந்நிகழ்வின் முழுக்காரணமும் மறைந்து இருக்கிறது.



ஒரு தலைமுறைக் காலத்திற்கு முன்னர் பருவ மழை பொய்க்கிற பொழுதில் மட்டுமே தமிழகம் வறட்சியால் வாடியிருக்கிறது; ஆனால் கடந்த முப்பதாண்டுகளில் நீர்ப்பற்றாக்குறை ஆண்டிற்கு ஆண்டு கூடிக்கொண்டே போகிறது. ஒவ்வொரு பத்தாண்டிலும் மழைப்பொழிவு குறைந்துகொண்டே வருகிறது. இதன் விளைவாக நிலத்தடி நீரின் அளவு குறைந்துகொண்டே போகிறது. 40 ஆண்டுகளுக்கு முன்னர் 40 அடி ஆழம் உள்ள கிண…