Posts

Showing posts from May, 2013

ஆண்மைத் திமிர்!

Image
கடந்த ஆண்டு திசம்பர் 16ஆம் நாள் 23 வயதுடைய சோதி சிங் பாண்டே என்னும் மருத்துவக் கல்லூரி மாணவி, தில்லியில் ஓடும் பேருந்தில், அறுவர் கும்பலால் வல்லுறவிற்கு ஆளானார். அதனையொட்டி தில்லிவாழ் மாணவர்களும் நடுத்தரவர்க்கத்து அறிவாளிகளும் தெருவிற்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அப்பொழுது பொதுமக்கள் உணர்வைத்தூண்டி பரபரப்பு ஏற்படுத்தும் வேறு செய்திகள் எதுவும் கிடைக்காததால், ஊடகங்கள் அந்த ஆர்ப்பாட்டங்களை உணர்வைத் தூண்டும் செய்திகளாக மாற்றின. பெரும் ஊழல்கள், பொருளாதாரக் கடும் நெருக்கடி ஆகியவற்றால் இந்தியாவின் தற்போதைய ஆட்சியாளர்கள் மீது பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சினத்தை, அடுத்த ஆண்டு வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமக்கான வாக்குகளாக மாற்ற இன்றைய எதிர்கட்சிகள், குறிப்பாக பாரதிய சனதா, இவ்வல்லுறவுக் கொடுமையை தமக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டன. இவர்கள் அனைவரையும்விட தங்களுக்கு அப்பெண்ணின் மீது அதிக அக்கறை இருப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டிய இக்கட்டில் இருந்த ஆட்சியாளர்கள் அப்பெண்ணை உயர்சிகிச்சைக்காக (?) திசம்பர் 26ஆம் நாள் சிங்கப்பூருக்கு அனுப்பினார்கள். திசம்பர் 29ஆம் நாள் அப்பெண் ச…

சி. சு. செல்லப்பாவின் கவிதைகள் – ஒரு பார்வை

Image
சின்னையில் பிறந்து, வதிலையில் வளர்ந்து, மதுரையில் பயின்று, சென்னையில் சிறந்தவர் சின்னமனூர் சுப்பிரமணியம் செல்லப்பா.இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியை நடுவாகக்கொண்ட கள்ளர்நாட்டு மக்களின் வாழ்க்கை முறையை, கலையை, பண்பாட்டைக் களனாகக்கொண்டு “கள்ளர்நாட்டுக் கதைகள்” என்னும் பிரிவையும் காந்தியக் கோட்பாடுகளைக் களனாகக்கொண்டு “காந்தியக் கதைகள்” என்னும் பிரிவையும் தமிழில் தொடங்கிவைத்தவர்.மணிக்கொடி எழுத்தாளரான இவர் காந்திய வழியை தன்னுடைய வாழ்க்கைநெறியாக ஏற்றுக்கொண்டவர்.மனிதனுக்கும் விலங்கிற்கும் இடையில் நடக்கும் போராட்டத்தை நிலைகளனாகக் கொண்டு புனையப்பட்ட வாடிவாசல், நினைவோடை உத்தியைக்கொண்டு புனையப்பட்ட ஜீவனாம்சம் ஆகிய இரு புதினங்களின் மூலம் தமிழ்ப் புதின இலக்கிய வரலாற்றில் சிறப்பிடம் பெற்றவர். திறனாய்வுக்கென்று தொடங்கிய ‘எழுத்து’ இதழை ‘புதுக்கவிதை’யைக் காக்கும் களமாகப் போற்றி வளர்த்தவர்.வசனகவிதையில் இருந்து புதுக்கவிதையை வேறுபடுத்திக் காட்டிய வித்தகர்.“புதுக்குரல்” என்னும் புதுக்கவிதைத் தொகுப்பை இருமுறை பதிப்பித்தவர்.
அழகின்மையால் மணமாகாதிருக்கும் பெண்ணொருத்தியின் மனவோட்டத்தைப் படம்பிடிக்கும…