Posts

Showing posts from June, 2012

மு.வ.வைப் பற்றிய மூவா நினைவுகள்

Image
ற்றதைக் கூறும் சாதாரண ஆசிரியர் (கிளிப்பிள்ளையர்?), விரித்துக் கூறும் விரிவுரையாளர், விளக்கிக் கூறும் புலமையாளர், சமூக உணர்வூட்டும் நல்லாசிரியர் எனஆசிரியர்களை நான்கு வகையினராகப் பிரிக்கிறார் நூலாசிரியர் முனைவர் ம.ரா.போ.குருசாமியார்.இவர்களுள் தலையாயவரான நல்லாசிரியர் என்பவர் பாடப் பகுதிகளை மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கு அப்பால், மாணவர்தம் புரவலராக, உற்றுழி உதவும் நண்பராக, வழிவகுத்து நடத்தும் தந்தையாக, தாயாக விளங்குவார் என வரையறுக்கிறார். இந்த வரையறைக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்தான் நூற்றாண்டு காணும் தன் பேராசிரியர் முனைவர் மு. வரதரானார் என்கிறார் தொண்ணூறாண்டு காணும் மாணவரான முனைவர் ம.ரா.போ.குருசாமியார்.இதனை அவருக்கும் தனக்கும் இடையே நிலவிய 30 ஆண்டுகால உறவை நினைவுகூர்ந்து எழுதிய 19 கட்டுரைகளின் வழியாக நிறுவுகிறார். அத்தோடு நல்லாசிரியர், நற்பண்பாளர், கடமை நோன்பிநர், நெகிழ்மனநிலையிநர் என மு.வ.வின் ஆளுமையையும் எடுத்துரைக்கிறார்.
நல்லாசிரியர்:“கல்வி நிலையத்தின் சுவர்களுக்கு அப்பால் விரிந்து கிடக்கின்ற உலகத்தைப் பற்றியும் மாணவர் தெரிந்து, புரிந்துகொள்கிற வகையில் கற்பிப்பதே ஆசிரியரின் கடமையாகும்” எ…

அடையாளம் தேடும் அடையாளங்கள்

அடையாளம் அற்று இருக்கும் அடையாளம்
அடையாளத்தால்மறைக்கப்படுகிறது
அடையாளத்தோடு இருக்கும்
அடையாளமும்
அடையாளத்தால் மறைக்கப்படுகிறது
ஆயினும்
அடையாளம் அற்றஅடையாளமும்
அடையாளம் உள்ள அடையாளமும்
தத்தம்
அடையாளங்களைத் தேடி அடைகின்றன
அவ்வடையாளங்கள்
தம்
அடையாளங்கள்தானா
என்னும் ஐயம் எழுகையில்
அவ்வடையாளங்களைத் துறந்து
அடையாளத்தைத் தேடி அலைகின்றன