Posts

Showing posts from March, 2012

திருமிகு மு. மாரியப்பனார் எழுதிய சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யுடன்...

Image
குமுகாயத்தை இயக்குபவர்கள் மூன்று வகையினர். தம்முடைய ஆசை, விருப்பம், எண்ணம், கருத்து ஆகியவற்றையே மக்களின் ஆசை, விருப்பம், எண்ணம், கருத்து என எடுத்துரைத்து, அவற்றிற்கு ஆதரவாகப் பொதுக்கருத்தை உருவாக்கி, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவோர் ஒரு வகையினர். தம்மை அடியொற்றியே குமுதாயம் இயங்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம் ஆகும்.

மக்களின் ஆசை, விருப்பம், எண்ணம், கருத்து ஆகியவற்றின் வன்மை, மென்மைகளை ஆராயாமல் அவற்றை அப்படியே தம்முடைய கருத்தாக ஏற்று, பொதுக்கருத்தை உருவாக்கி அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களிடம் வலியுறுத்துவோர் இன்னொரு வகையினர். தம்மை அடியொற்றியே தாம் வாழும் குமுகாயம் இயங்குகிறது என்னும் தோற்றத்தை உருவாக்குவதே இவர்களுடைய நோக்கம் ஆகும்.

மக்களின் ஆசை, விருப்பம், எண்ணம், கருத்து ஆகியவற்றை நன்கு அறிந்து அவற்றின் வன்மை, மென்மைகளை தம்முடைய இயல்பறிவு (Wisdom), கல்வியறிவு (Knowledge), பட்டறிவு (Experience) ஆகியவற்றால் ஆய்ந்து, கொள்வன கொண்டு, தள்ளுவன தள்ளிய பின்னர் தேர்வனவற்றோடு தம்முடைய ஆசை, விருப்பம், எண்ணம், கருத்து ஆகியவற்றையும் இணைத்து, பொதுக்கருத்தை உர…