ஊக்கம் தரும் பா!



அற்ப நினைவுகள் இல்லா - ஓர்
ஐந்தாறு தோழர்கள் போதும்
பற்பல வித்தைகள் செய்வேன் - அவர்
பண்புத் துணையுடன் நானே!

சமூகச் சீரழிவுகளைக் காணும் பொழுதும் அவற்றை மாற்ற முனைந்து தோல்வியைத் தழுவிச் சோர்வடையும் பொழுதும் எனக்கு "ஊக்கம் தரும் பா" இது. இதனை நான் உத்தமபாளையம் ஃகாசி கருத்தராவுத்தர் கவுதியா கல்லூரியிற் படித்துக்கொண்டிருந்த பொழுது அக்கல்லூரியின் நூலகத்தில் இருந்த கவிதை நூலொன்றிற் படித்தேன். அப்பாடல் அப்படியே மனதிற் பதிந்துவிட்டது. அப்பாடலை எழுதியவர் தன் இறுதிக்காலம் வரை சிங்க நோக்கராகவே வாழ்ந்து மறைந்த தன்மானத் தமிழ்ப் பேராசிரியர் கவிஞர் சாலை இளந்திரையனார் ஆவார்.

நீண்ட நாளாக எனது நினைவுக் குளத்தில் மிதக்காத இக்கவிதைத் தாமரை, நேற்று சற்று நான் மனம் தளர்ந்திருந்த வேளையில் மீண்டும் எனது மனக் குளத்திற் பூத்து ஊக்கம் தந்தது. பூத்த ஊக்கமே அந்தப் பாடலை உங்களோடு பகிர்ந்து கொள்ளத் தூண்டியது.

No comments:

Post a Comment

கலகத் தமிழிசைக் கலைஞர்

கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவைய...