Posts

Showing posts from February, 2009

மொழியாக்கத்திற்கு விருது: சில சிந்தனைகள்

இந்தியா அரசியல் விடுதலைப் பெற்ற பின்னர், இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள அனைத்துப் பண்பாடுகளின் வேர்களையும் வெட்டிவிட்டு சமசுகிருதப் பண்பாடே இந்தியாவின் ஒன்றைப் பண்பாடு என்னும் தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட பல்வேறு கலை, இலக்கிய, பண்பாட்டு அமைப்புகளில் ஒன்றே சாகித்ய அகாதெமி என இந்தி மொழியில் அழைக்கப்படும் இலக்கியக் கழகம். இக்கழகம் ஆண்டுதோறும் இந்தியத் துணைக்கண்டத்திற்குள் புழகக்கத்தில் உள்ள, அக்கழகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, மொழிகளில் வெளிவரும் படைப்புகளுக்கு ஆண்டுதோறும் விருதுகளை வழங்கிவருகிறது. அவ்விருதினைப் பெற்றவர்கள் அவ்வவ் மொழியின் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளாகக் கருதப்பட்டு வருகிறார்கள். இவ்வகையிலேயே தமிழ்மொழியிலும் கருதப்படுகிறார்கள். எனவே இவ்விருதினைப் பெறுவதற்கு ஆண்டுதோறும் எழுத்தாளர்களிடையே ஏராளமான போட்டிகளும் ஆள்பிடிக்கும் வேலைகளும் நடைபெறுவதாக ஒரு கருத்து நிலவுகிறது. அக்கருத்தின் சிறு கீற்றினை நீல. பத்மநாபனின் தேரோடும் வீதி புதினத்திலும் காணலாம். எனவேதான் இவ்விருது அறிவிக்கப்படும்பொழுது, பெரும்பாலான ஆண்டுகளில், அது தகுதியானவருக்கு வழங…

உயர்வில்லை தாழ்வில்லை

உயர்வில்லை தாழ்வில்லை கண்ணே! - உலகில்
உயர்வில்லை தாழ்வில்லை கண்ணே!
அவரவர் பண்பினா லன்றி - யாரும்
உயர்வில்லை தாழ்வில்லை கண்ணே! (உயர்வில்லை)

உருவமும் வயதும் உயரமும் நிறமும்
பேசும் மொழியும் பிறந்த நாடும்
பாலினத் தோடு பண்பாடிவை
எதனைக் கொண்டும் யாருமிங்கே (உயர்வில்லை)

சாதி மத பேதங் களின்றி
சரிநிகர் சமமென வாழும்
நீதியை நாடி நீயும் நானும்
நிமிர்ந்து நடக்கையில் யாருமிங்கே (உயர்வில்லை)

நீயுமில்லை நானுமில்லை
இவருமில்லை அவருமில்லை
எவருமில்லை யாருமிங்கே
உயர்வில்லை தாழ்வில்லை கண்ணே! – உலகில் யாரும்
உயர்வில்லை தாழ்வில்லை கண்ணே! - ஆம்
உயர்வில்லை தாழ்வில்லை கண்ணே! - என்றும்
உயர்வில்லை தாழ்வில்லை கண்ணே ! (உயர்வில்லை)