Posts

Showing posts from January, 2009

களமாடிய கலைஞன்

Image
1995ஆம் ஆண்டில் தொடக்கத்தில் இராமநாதபுரத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த ஊரக மேம்பாட்டு அணையத்தில் நான் கணக்காளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அப்பொழுது கிரை (CRY) நிறுவனம் நடத்திய குழந்தைகள் உரிமைகளுக்காக வழக்காடுதல் தொடர்பான திட்டமிடல் கூட்டத்திற்கு சென்னை சென்று திரும்பிய அந்நிறுவனத்தின் இயக்குநரும் என்னுடைய நலம் நாடிகளுள் ஒருவருமான திருமிகு இரா. செயக்குமாரர், கூட்டத்தில் தான் சந்தித்த நவீன நாடக்காரரும் குழந்தைகள் உரிமைச் செயல்பாட்டாளருமான திருமிகு சுரேசு தர்மாவைப் பற்றிக் கூறினார். அச்செயல்பாட்டாளர் கன்னியாகுமரியின் மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டத்தைச் சார்ந்தவர் என்றும் அவருடைய தந்தை தன்னுடைய இளமைக் கால நண்பர் என்றும் அச்செயல்பாட்டாளர் கூரிய அறிவும் கொள்கைத் தெளிவும் நாடகத் திறனும் வாய்த்தவராக இருக்கிறார் என்றும் வாய்ப்புக்கிடைத்தால் நான் அவரைச் சந்திக்க வேண்டும் என்றும் கூறிக்கொண்டிருந்தார். இயல்பாகவே இயக்குநருக்கும் எனக்கும் நாடகத்தின்பால் இருந்த ஈர்ப்பால் பலவேளையில் பல்வேறு நாடக்காரர்களைப் பற்றியும் பல்வேறு நாடக உத்திகளைப் பற்றியும் பேசுவது வழக்கம். அவ்வுரையாடல்களின் ஒரு ப…

தட்டச்சு ?

உலோக விரல் நுனியின்
ஒற்றல் கிடைக்கும் வரை
எப்போதோ செருகிவைத்த தாளோடு
நகராது காத்திருக்கும் உருளை
நகர்ந்த தாள் முதுகில்
‘பளீர்’ எழுத்துகள் படிந்திருக்கும்
சில வேளை
தாளே நைந்து கிழிந்துருக்கும்
பல வேளை
(நாள் கணக்கில்
நாடாவின்றி பொறியிருக்கும்?)

எழுதாக்கவிதை

அந்த மேசையின் மேல்
நேற்று
ஏற்றிவைத்த மெழுகுவர்த்தி
எரிந்தெரிந்து உருகிவிட்டது
கோப்பையிலிருக்கும் தேனீர்
ஆடைபடிந்து ஆறிவிட்டது
டிக்டிக்கித்துக்கொண்டிருந்த கடிகாரம்
சாவியின்றி நின்றுவிட்டது
மேலேயிருக்கும் காலதரின் வழியே
உட்புகுந்த ஒளிக்கற்றையின் பரவலில்
அறையில் படிந்திருக்கும்
தூசி தெரிகிறது
தூரத்தில் தொங்கும்
பூச்சுப்போன கண்ணாடிக்குள்
சிவந்து வீங்கிய கண்களோடு
என் முகம் தெரிகிறது
தொடைக்குக் கீழிருக்கும் கால்கள்
உணர்வற்றுவிட்டன
தூவலைப்பிடித்திருந்த விரல்களில்
தழும்புகள் விழுந்துவிட்டன
சொற்களைத்தேடித்தேடி
சேர்ந்த மூளை
களைத்துவிட்டது
எனினும்
இன்னும் அந்தக்கவிதை
எழுதப்படாமலேயே இருக்கிறது

நான்

கால முனைகளுக்கிடையில்
இழுபடும் வண்டி
அடிக்கடி
நினைவுக்கூரையில்
ம்
கு
ங்
தொ
காற்றாடி
சோதனைச் செருப்புக்கடியில்
கிடந்து நசுங்கும்
பூ
உணர்வு நீரின்
கொதிநிலை காக்கும்
தெர்மாசு பிளாக்சு
எல்லையறுத்துப் பறக்கும்
பறவையின்
புத்தின ஓவியம்
புதுவிடம் தேடிவிரையும்
மலையருவி
பொருள்க் கரைகளுக்கிடையில்
அசைந்து நடக்கும்
ஆறு

பனைத் தொழில் - ஒரு பார்வை

Image
'கற்பகத் தரு' என அழைக்கப்படும் பனை இந்தோனேசியா, மலேசியா, சீனா, வங்காளம், இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இந்தியாத் துணைக்கண்டத்தில் மேற்கு வங்கம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிகம் காணப்படுகிறது.

கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமம் (Kadhi and Village Industry Commission) எடுத்த கணக்கெடுக்கின்படி 10.2 கோடி பனை மரங்கள் இந்தியாவில் உள்ளன. தமிழ் நாட்டில் மட்டும் 5 கோடி பனை மரங்கள் உள்ளன. இவற்றுள் 50 விழுக்காடு மரங்கள் நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் அடர்ந்துள்ளன. சேலம், சென்னை, செங்கற்பட்டு, சிவகங்கை மாவட்டங்களில் அதிகமான அளவு நிறைந்துள்ளன. பிற மாவட்டங்களில் உள்ள மரங்களின் எண்ணிக்கை 30 லட்சத்திற்கும் குறைவானதே.பனைமரம் உணவு மற்றும் உணவிலிப் பொருள்களை நல்குகிறது. உணவுப் பொருள்களில் பதநீர் முதன்மையானது. இதுவே கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் எனப் பல்வேறு உணவுப் பொருள்களாக வடிவம் பெறுகிறது. பனந்தும்பு, தூரிகைகள், கழிகள், பனையோலைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், மரம், மரப் பெ…