Posts

சனிக் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான புதிய நிலவியல் உண்மைகள் கண்டுபிடிப்பு!

Image
சனிக்கோள் மிகப்பெரிய டைட்டான். பள்ளங்கள் நிறைந்த போஃபே ஆகியன தொடங்கி வெந்நீர் ஊற்றுகளையுடைய இன்செலடசில் வரை 60க்கும் மேற்பட்ட நிலவுகளின் இல்லம் ஆகும். குறிப்பாக இன்செலடசில், நுண்ணியிரிகளை வளர்ப்பதற்குப் பொருத்தமானது என முன்மொழியப்பட்டுக்கொண்டு இருக்கிறது. அதனுள்ளே இருக்கும் வெப்பப் பெருங்கடலுக்கு நன்றி. சில பில்லியன் ஆண்டுகளேயான பூமியில் நுண்ணறிவு உயிரிகள் பரிணமிக்க முடியுமானால், 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான நமது சூரியக் குடும்பத்தில் எங்கேனும் குறைந்த அளவாக மிக எளிய உயிரிகள் ஏதேனும் ஏன் இருக்க முடியவில்லை?

ஆனால், தற்போதைய வானியற்பியல் ஆய்விதழில் (Astrophysical Journal) வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வு, மிக அண்மையில் 100 மில்லியன் ஆண்டுகளுக்குமுன்னர், பூமியில் டைனோசர்கள் உலவிக்கொண்டிருந்தபோதுதான், சனிக்கோளின் பெரும்பான்மையான நிலவுகள் தோன்றின எனக் கூறுகிறது. இது, நிலவுகளின் வயதுபற்றிய பொதுவான நமது புரிதலுக்கு வெல்விளி இடவும் புதிய பல வினாக்களை எழுப்பவும் செய்கிறது. இதை எப்படி நம்மால் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்? இவ்வளவு குறுகிய காலத்துக்குள் அங்கே உயிரினங்கள் பரிணம…

த இண்டிபெண்டன்டின் இறுதி இதழ்

Image
த இண்டிபெண்டன்ட் இதழின் அச்சுவடிவ இறுதி மலர், இங்கிலாந்தில் வாழும் அதிருப்தியடைந்த சவூதிக்காரர் ஒருவருக்கு, சவூதி அரசரைக் கொல்லும் சதியில் தொடர்பிருந்ததாகக் குற்றம்சாட்டும் வலுவான புலனாய்வுக் கட்டுரையை முதற்பக்கத்தில் வெளியிட்டு, 30 ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விதழ் வெளிவந்ததைப் போன்ற அதே நேர்த்தியோடும், தாகத்தோடும் வெளியேறுகிறது.

ஒரு டிராம் நிலையத்தில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றிலிருந்து பெல்ஜியம் நாட்டின் பிரஸல்ஸ் நகரப் பயணிகள் அவசரமாக முந்திக்கொண்டு பின்வாங்கும் காட்சியை வலுவான ஒளிப்படமாக, தனது இறுதி முதற்பக்கத்தில் வெளியிட்டு, அதை மறக்கமுடியாத ஒன்றாகவும் ஆக்கியிருக்கிறது. அவ்வாரம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய பயங்கரவாதத்தின் கடுமையான மனநிலையை அந்த ஒளிப்படம் கச்சிதமாகப் பிரதிபலித்தது. மற்ற இதழ்கள் நிகழ்விடத்தில் காயம்பட்ட பயங்கரவாதத்தின் சந்தேகத்தை படம்பிடித்துவிட்டுச் சென்றுவிட்டன. த இண்டிபெண்டன்ட்டின் தேர்வோ, உலக நிகழ்வுகளால் சாதாரண மக்களுக்கு ஏற்படும் விளைவைப் பற்றிய அதன் அக்கறையைப் பிரதிபலிப்பதாக இருந்தது.

இறுதி இதழ், முக்கியமான பொதுநலம்சார்ந்த தனிநிலைக்…

நிறவெறி: ஆன்ட்ரூ சாக்சனைப் பின்பற்றும் டொனால்டு டிரம்ப்

Image
2016 நவம்பர் 8ஆம் நாள் நடைபெற இருக்கும் அமெரிக்க குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் குடியரசுக் கட்சி (Republican Party) சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் தேர்வில் முன்னிலையில் இருக்கும் டொனால்டு டிரம்ப் அக்கட்சிக்கே திகிலூட்டுபவராக இருக்கிறார். பீதியூட்டுகிற, பாதுகாப்பைக் குலைக்கும் தொனியிலான அவரது உரைகளைக் கேட்கும் நீங்கள், ‘இதற்கு முன்னர் இதுபோல எப்பொழுதும் நடந்திருக்காது’ என எண்ணியிருக்கக் கூடும்.  ஆனால்,  அது உண்மை அன்று.             முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் வேட்பாளர் நியமனத்தை நோக்கி டொனால்டு டிரம்ப் செல்கிறார் எனக் கூறப்படுகிறது. ஆனால்,  1829ஆம் ஆண்டு முதல் 1837ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் 7ஆவது குடியரசுத் தலைவராக இருந்தவரும் 20 டாலர் பிரேரணையில் சர்ச்சைக்குரிய முகத்தைக்கொண்டு இருந்தவருமான ஆன்ட்ரு சாக்சனின்  கடந்துசென்ற வாழ்க்கையோடு டிரம்ப்பின் வாழ்க்கை ஒத்திருப்பதாக வரலாற்று எண்ணம்கொண்ட நோக்கர்கள் சிலர் கருதுகின்றனர். # 1: போட்டியை நோக்குக 1829ஆம் ஆண்டில் வெள்ளை மாளிகையை சாக்சன் வெல்வதற்கு முன்னரே, அமெரிக்க நாட்டின் கட்சிகள் மாறிக்கொண்டிருந்த 1824ஆம் ஆண்டில் அவர் குடியரசுத…

இராமநாதபுரம் அரண்மனை

Image
கிழவன் சேதுபதிக்கு மேற்கிலிருந்து மதுரை நாயக்கர்களும் வடக்கிலிருந்து தஞ்சை மராட்டியர்களும் தெற்கிலிருந்து சாயல்குடி வட்டகைப் பாளையக்காரர்களும் தொல்லைகொடுத்து வந்தனர்.  எனவே அவர் தனது தலைநகரை பாதுகாப்பற்று  இருந்த புகலூரிலிருந்து அதற்கு கிழக்கே எட்டுக்கல் தொலைவில் பாண்டியர் கால மண்கோட்டைக்குள் அமைந்திருக்கும் இராமநாதபுரத்திற்கு மாற்றினார். பின்னர் அந்த மண்கோட்டையை இடித்துவிட்டு 27 அடி உயரமும் 5 அடி அகலமும் 42 கொத்தளங்களும் இரண்டுகல் சுற்றுப்பரப்பளவும்கொண்ட அகழி சூழ்ந்த, கிழக்குத் திசையில் ஒற்றை வாயிலையுடைய, செவ்வக வடிவ கற்கோட்டையையும் அரண்மனையையும் 1690க்கும் 1694க்கும் இடைபட்ட காலத்தில் கட்டினார். இதன் அழகைப் பற்றி 1772 சூன் 3ஆம் நாள் இராமநாதபுரம் அரண்மனையைக் கைப்பற்றிய ஆங்கில தளபதி சோசப் சுமித்தும்  இதன் அமைப்பைப் பற்றி முழுமையாக 1773 ஆம் ஆண்டில் வரிவசூலிப்பதற்காக இங்கு வருகைதந்த ஜெனரல் ஜார்ஜ் பேட்டர்சனும் தம்முடைய ஆவணங்களில் பதிந்துள்ளனர்.
1702ஆம் ஆண்டில் நரசப்பய்யன் தலைமையில் நிகழ்ந்த இராணிமங்கம்மாள் படையெடுப்பு, 1709, 1771ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த தஞ்சை மராட்டியப் படையெடுப்புகள், 17…

கலகத் தமிழிசைக் கலைஞர்

Image
“இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவையும் கலையில்லை; அவை வெறும் பரப்புரைகள்” என்று இடையறாது சொல்லிவந்த வெங்கட்சாமிநாதன், இடதுசாரி மேடையொன்றில் அரங்கேறிக்கொண்டிருந்த கலைநிகழ்ச்சிகளை வறுத்த நிலக்கடலையை கொரித்தவாறே கவனித்துக்கொண்டு இருந்தார். அங்கு அரங்கேறிய சில நிகழ்வுகள் அவரின் கருத்திற்கு வலுச்சேர்ப்பனவாக இருந்தன. அவர் சலிப்படைந்து, ‘சரி கிளம்பலாம்’ என எண்ணியபொழுது கறுத்த, குள்ளமான, ஒல்லியான 25வயதே மதிக்கத்தக்க, நகரத்துப் பகட்டுகள் எதுவுமில்லாத இளைஞர் ஒருவர் மேடையேறி ஒலிவாங்கியை எடுத்து பாடத்தொடங்கினார். கணீரென்ற அவரது குரலொலியும் பாடலும் இசையும் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமான வெ.சா.வின் செவியைப்பிடித்து இழுத்து நிறுத்தின. கையிலிருந்த நிலக்கடலை தீர்ந்த பின்னரும் அவர் அங்கேயே நின்று அந்த இளைஞரின் இசைக்கடலுக்குள் மூழ்கிப்போனார். அந்த இசைக்குள் பொதிந்துவந்த ஆதிக்க எதிர்ப்பு, ஒடுக்கப்பட்டோர் எழுச்சி ஆகிய பாடுபொருள்கள் வலதுசாரியான வெ.சா.வுக்கு உவப்பானதாக இருந்திருக்காது; ஆனாலும் அவரால் அந்த இளைஞரின் கலகத்தமிழிசையை, ‘இது கலையன்று; வெறும் பரப்புரையே’ எ…

சே. இராமானுசம் : வேரிலிருந்து கிளைத்த புதுமை

Image
மெக்காலே கல்விக்கு மாற்றாக, இந்தியக் குழந்தைகள் தம் மரபார்ந்த அறிவையும் உள்ளார்ந்த திறனையும் தாமே கண்டறிந்து தமக்கான புதிய திறன்களைப் பெற்றுக்கொள்ள உதவுவதை தனது நோக்கமாகக்கொண்ட, ‘நைதலிம்’ என்னும் காந்தியக் கல்விக்கோட்பாட்டின் அடிப்படையில் உருவான ஆதாரக்கல்வி முறையில் இயங்கிய காந்திகிராம தொடக்கப்பள்ளியில்ஆசிரியராக 1950களின் பிற்பகுதியில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், நெல்லை மாவட்டத்திலுள்ள நான்குநேரியில் திருமாலியக் குடும்பம் ஒன்றில் 1935ஆம் ஆண்டில் பிறந்து, ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்ட பெற்ற சே. இராமானுசம். அப்பொழுது காந்திகிராமத்தில் பணியாற்றிய, நாட்டார் பாடல்களைத் திரட்டித் தொகுத்து பின்னாளில் ஏட்டில் எழுதாக்கவிதைகள் என்னும் நூலை வெளியிட்ட அன்னகாமு, மலையாள நாடக ஆசிரியர் கோ. சங்கரபிள்ளை, கல்கத்தாவில் தாகூரின் சாந்திநிகேதனில் ஓவியக்கல்வியும் தில்லியில் ஆசிய நாடக நிறுவனத்தில் நாடகக்கல்வியும் பெற்ற எசு.பி.சீனிவாசன் ஆகியோரின் நட்பு இராமானுசத்திற்கு கிடைத்தது. விடுமுறை நாள்களிலும் ஒழிந்த நேரங்களிலும் அப்பகுதியிலுள்ள சிற்றூர்களுக்குச் சென்று நாட்டார் பாடல்களைத் திரட்டும் பணியில் அன்ன…